Friday, April 25, 2008

இன்றைய கிளிநொச்சி மவாட்ட காலநிலை

25.04.2008 வெள்ளிக்கிழமை.
இன்று முற்பகல் வானம் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும் பிற்பகல் கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் கரும் படைமுகில் அல்லது கரும் முகில் கூட்டத்துடன் கானப்படும். இன்று வெப்பம் 36 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பிற்பகல் அல்லது நாளை மேற்குறிப்பிட்ட திசையில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை இடியுடன் பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்றும் நாளையும் பரவலாகவோ அல்லது அனேகமான இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் மழையோ அல்லது தொடர் மழையோ 28.04.2008 வரைக்குள் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.54
அந்தி - 7.19
சந்திரன் 20ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்

அனேகமான மாவட்டங்களில் அங்காங்கே தூறிட்டு அல்லது சற்று அதிகமாக பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

24.04.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்.
96 வீதம் ஈரப்பதன்
37 பாகை செல்சியஸ் வெப்பம்
27 கி.மீ காற்று தென் கிழக்கில் இருந்து
அதிகமாக பதிவாகியுள்ளது.

29.58 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.52 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
67 வீதம் ஈரப்பதன் குறைவாக பதிவாகியுள்ளது

No comments: