Tuesday, April 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

08.04.2008 செவ்வாய்க்கிழமை
இன்று முற்பகல் வானம் கரும் படைமுகில் மற்றும் கரும் முகில் கூட்டம் நகர்ந்தபடியும் முற்பகலின் பின்னர் கரும் மேகமூட்டத்துடனும் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 48 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முற்பகல் அங்காங்கே தூறிவிட்டு அல்லது சற்று அதிகமாக மழை பெய்துவிட்டுப்போகும். முற்பகலின் பின்னர் அனேகமான இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இம் மழை ஒரு சில இடங்களில் இடியுடன் இருக்காக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

குறிப்பு!
நேற்று பெய்த மழையை விட சற்று கூடுதலாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது நாளை அல்லது நாளை மறுதினம் இம் மழை குறைந்து அங்காங்கே தூறிவிட்டு அல்லது சற்று அதிகமாக பெய்து விட்டுப்போகும். வாய்ப்பும் உள்ளது.

தமிழீழத்தில்

மட்டக்களப்பு, திருமழை ,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

07.04.2008 அன்று பதிவாகியது.

29.73 இஞ்செஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதன்
32 பாகை செல்சியஸ் வெப்பம்
47 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.64 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.62 இஞ்செஸ் அமுக்கம் பிறபகலும்
62 வீதம் ஈரப்பதனம்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியதுடன்

பாரதி புரத்தில் 2.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

No comments: