Wednesday, April 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

23.04.2008 புதன் கிழமை

இன்று முற்பகல் வானம் தெளிவாக இருப்பததுடன் பிற்பகல் தெற்கு, தென்மேற்கு, கிழக்கு திசையில் கரும் படைமுகில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேகமான இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. மேற்குறிப்பிட்ட திசையில் ஏதாவது ஒரு இடத்தில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்துவிட்டுப்போகக்கூடுடிய வாய்ப்புகள் உள்ளது. பெரும் தொடர் மழை 25.04.2008 வரைக்குள் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.55
அந்தி - 7.19
சந்திரன் 18ம் இடம்

தமிழீழத்தில்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் மிருது வான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை பரவலாகவும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

22.04.2008 அன்று பதிவாகியுள்ளது.

29.63 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
36 பாகை செல்சியஸ் வெப்பம்
32 கி.மீ காற்று தென்மேற்கு திசையில்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.54 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.50 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
45 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

2.5 மி.மீ பனி சராசரியாக பதிவாகியுள்ளது கிளிநொச்சியில்.

No comments: