09.04.2008 புதன்கிழமை.
இன்று முற்பகல் வானம் கரும் படைமுகிலடனும் இடைக்கிட வெண்கரும் படைமுகிலுடனும் காணப்படும். முற்பகலின் பின்னர் அனேகமான இடங்களில் கரும் படைமுகிலுடனும். ஒரு சில பகுதியில் மேகமூட்டத்துடனும் கானப்படும். இன்று ஒரு சில பகுதியில் அல்லது ஒர் இரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. இம் மழை இடியுடன் இருப்பதுடன் மிருதுவான மழைக்கு உட்பட்டு இருக்கும் இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை நாளை சற்று குறைந்த நிலையில் அங்காங்கே மழை பெய்துவிட்டுப் போகும் வாய்ப்புகள் உள்ளது.
தமிழீழத்தில்
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று அல்லது நாளை மிதமான மழை அல்லது கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமலை முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஒர் இரு இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மிருதுவான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பரவலாக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.
08.04.2008 அன்று பதிவாகியது
29.70 இஞ்செஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதனு;
30 பாகை செல்சியஸ் வெப்பம்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.60 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.59 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
74 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது
12.7 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment