Monday, April 7, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

07.04.2008 திங்கள்கிழமை.
இன்று வானம் கரும் முகில் கூட்டம் நகர்ந்த படி இருப்பதுடன் இடைக்கிட மந்தமும் மப்பும் வெயிலுமாக இருக்கும் இன்று முற்பகல் ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்துவிட்டுப்போகும். பிற்பகல் ஒரு சில பகுதியில்.அல்லது அனேகமான இடங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழீழத்தில்
அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு உட்பட்ட மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் அங்காங்கே தூறிவிட்டு அல்லது சற்று அதிகமாக மழை பெய்துவிட்டுப்போகும்.இன்று பரவலாக பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

06.04.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.78 இஞ்செஸ் அமுக்கமும்
94 வீதம் ஈரப்பதனும்
32 பாகை செல்சியஸ் வெப்பம்
34 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.67 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.66 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
54 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: