Sunday, April 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.


13.04.2008 ஞாயிற்றுக்கிழமை.

இன்று வானம் சில இடங்களில் தெளிவாகவும் ஏனைய இடங்களில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். பிற்பகலின் பின்னர் தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு திசையில் கரும் படைமுகில் கானப்படும் இன்று மேற்குறிப்பிட்ட திசையில் ஓர் இரு இடங்களில் தூறிவிட்டு அல்லது சற்று அதிகம் மழை பெய்துவிட்டுப்போகும் இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. இன்னிலை ஒரு வாரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
மன்னார், புத்தளம் மாவட்டங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிருதுவான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது இன்று பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை இன்னிலை இரண்டு அல்லது மூன்று நாளைக்கு நீடிக்க வாய்ப்புகள் உள்ளது.

12.04.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதன்
32 பாகை செல்சியஸ் வெப்பம்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

குறிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வாரம் பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக உள்ளது இந்த கால நிலையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.

No comments: