Monday, March 31, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

31.03.2008 திங்கள்கிழமை

இன்று வானம் முற்பகல் கருவெண் படைமுகிலுடனும் வெயிலுமாக இருக்கும். முற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடனும் ஒரு சில பகுதியில் கரும் முகில் கூட்டத்துடன் ஒரு சில பகுதியில் கானப்படுவதுடன் மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருக்கும் ஒரு சில பகுதில் மப்பாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்கள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முற்பகலின் பின்னர் வடகிழக்கு தொடற்கம் தென் கிழக்கு வரையான திசையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. 30.03.2008 அன்று பெய்த மழை போலவே இடியுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ( எமது நிலையத்தை மையமாக வைத்தே திசை கணிக்கப்படுகின்றது.) இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் தொடர் மழையும் இன்றும் நளையும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்

கிளிநொச்சி மாவட்ட காலநிலை அனே மாவட்டத்தில் இன்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்வற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

தமிழ் நாட்டில்
கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மிதமான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்கும்.

30.03.2008 அன்று பதிவாகியது.
20.70 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
93 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதடன்

29.69 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
23 பாகை செல்சியஸ் வெபமபமும்
61 வீதம் ஈரப்பதனும்
குறைவாக பதவாகியுள்ளது.

No comments: