Saturday, March 22, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

22.03.2008 சநிக்கிழமை.
இன்று முற்பகல் வானம் வெண் கரும் படைமுகிலுடன் வெயிலும் இடைக்கிட மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருக்கும். பிற்பகலின் பின்னர் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும்.கரும் முகில் கூட்டம்.ஒரு சில பகுதியிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 31 பாகை செல்சிஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 21.03.2008 அன்று பெய்த மழையை விட சற்று குறைவான மழையாக இருக்கும். இவ் மழைக்கான முகில் தென் மேற்கு,தெற்கு,தென் கிழக்கு திசையில் அதிகம் இருந்தே உருவாகும் வாய்ப்பும் உள்ளது.


தமிழீழத்தில்
மன்னார்,வவுனியா,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் .ஏனைய ஒரு சில பகுதியில் மிருதுவான மழை அல்லது தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்கும்.பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இன்றும் நாளையும் அனேகமாக இருக்காது.

தமிழ் நாட்டில்
கன்னியாக்குமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களின் கரையோர பகுதியில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் நளை சற்று குறைந்த நிலையில் மழை இருக்கும்.

21.03.2008 அன்று பதிவாகியது.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
35 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

29.52 இஞ்செஸ் அமுக்கமும்
62 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

7.44 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் பதிவாகியதுடன்.
பாரதி புரத்தில் மழை பெய்யும் போது பெய்த மழைவீழ்ச்சின் சராசரி 62.64 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

No comments: