16.03.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் மப்புடன் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்றும் 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் ஏனைய இடங்களில மிருதுவான மற்றும் மிதமான மழை பெய்யும். இவ் மழையானது நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
வன்னியில்
பரவலாக மழை பெய்யும்
தமிழீழத்தில்
பரவலாக மழை பெய்யும் மட்டக்களப்பு,அம்பாறை,திருமலை,மன்னார் ,வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது இலங்கை முழுவதும் பெய்வதுடன் தமிழ் நாட்டில் அனேகமாக இடங்களில் பெய்யும்
15.03.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.56 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்.
29.88 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளதுடன்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி அளவு 150.24 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment