Monday, March 3, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

03.03.2008 திங்கட்கிழமை

இன்று முற்பகல் வானம் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும் ஏனைய இடத்தில் கருவெண் படைமுகிலுடனும் கானப்படும். பிற்பகலின் பின்னர் கரும் முகில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று இடைக்கிட மந்தமும் வெயிலும் இருக்கும்.இன்று காற்று35 கி.மீ வரைக்குள் இருப்பதுடன் வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் இன்று முற்பகல் ஒர் இரு இடத்தில் தூறிவிட்டுப்போகும். பிற்பகலின் பின்னர் ஒர் இரு இடத்தில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை தாழ்வான அல்லது குளிர்ச்சியான இடங்களில் பெய்யக்கூடீய வாய்ப்பு உள்ளது. நாளை அல்லது நாளை மறுதினத்துக்கு பின்னர் அனேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களின் சில இடத்தில் தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது இது நாளை அல்லது நாளை மறுதினம் அதிகமாக பெய்யும் வாய்ப்பு உள்ளது.

02.03.2008 அன்று பதிவாகியது
29.74 இஞ்செஸ் அமுக்கமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
93 வீதம் ஈரப்பதமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.63 இஞ்செஸ் அமுக்கமும்
61 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: