14.03.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் முற்பகல் அதிக இடத்தில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் கரும் படைமுகிலுடனும் ஒரு சில பகுதிகளில் கரும் முகில் கூட்டத்துடனும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ் மழை ஒர் இரு இடங்களில் மிருதுவான இடியுடன் கூடிய மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனைய ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழையாக இருக்கும. இன்னிலை இரு தினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
வன்னியில்
அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஏனைய ஒரு சில இடங்களில் மிருது வான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழீழத்தில்
கடந்த தினங்கள் பெய்து வந்த மழை சற்று குறைந்து இரு தினங்களுக்கு இருக்க வாய்ப்பு உள்ளது இவ் மழை 18ம் திகதிக்கு பின்னர் பலமடைந்து பரவலாக கனமழையாக பெய்யக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்றும் நாளையும் பரவலாக பெரும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
14.03.2008 அன்று பதிவாகியது
29.73 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது
29.57 இஞ்செஸ் அமுக்கமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
88 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியுள்ளது.
பாரதிபுரத்தில் 14.16 மி.மீ மழையும்.
பாரதிபரத்தில் மழை பெய்த போது பெய்த மழையின் சராசரி மழை வீழ்ச்சி 94.08 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment