Thursday, March 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

13.02.2008 வியாழக்கிழமை

இன்று வானம் இடைக்கிட மப்பும் மந்தமுமாக இருப்பதுடன் வெயிலும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில பகுதியில் மழை பெய்யும். இவ் மழை தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழையாக இருக்கும். ஒர் இரு இடங்களில் தாழ்வான மற்றும் குளிர்ச்சியான இடங்களில் மிருதுவான மழை பெய்துவிட்டுப்போகும்.இவ் மழை பிற்பகல் 3 மணியின் பின்னர் இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று பரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

வன்னியில்

அனேகமான இடங்களில் மழை பெய்யும் இவ் மழை மிருது வான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஓர் இரு இடங்களில் கனமழை பெய்துவிட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்

வன்னி காலநிலை இருக்க வாய்ப்பு உள்ளது.

12.03.2008 அன்று பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
72 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

பாரதி புரத்தில் 7.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

குறிப்பு
12.03.2008 அன்று குறிப்பிட்ட படி கிளிநொச்சி நகரப்பகுதி உட்பட அனேக இடத்தில் குறிப்பிட்ட மழை பெய்தது.

No comments: