Tuesday, March 11, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

11.03.2008 செவ்வாய்க்கிழமை.

இன்று அனேகமாக மப்புடன் இருக்கும். இன்று வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 38 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழைபெய்யும் வாய்ப்பு உள்ளது.இவ் மழை ஒரு சில இடங்களில் கனமழையும் ஏனைய இடங்களில் மிதமான மற்றும் மிருதுவான மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

வன்னியில்
இன்று அனேகமான இடங்களில் அல்லது பரவலாக மழை பெய்யும் இவ் மழை கிளிநொச்சி மாவட்ட காலநிலை போல இருக்க வாய்ப்பு உள்ளது.

தமிமீழத்தில்.
வடகிழக்கு கரையோர மாவட்டங்களில் மழை பெய்யும் யாழ்ப்பாணத்தில் கனமழையாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை சற்று குறைந்த நிலையில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

10.03.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.73 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
37 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
67 வீதம் ஈரப்பதமும் கூறைவாக பதிவாகியதுடன்

பாரதிபுரத்தில் 42.24 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வன்னியில் பெய்த சராசரி மழை வீழ்ச்சி 141.12 மி.மீ பதிவாகியுள்ளது.

No comments: