Friday, March 21, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

21.03.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் கருவெண் படைமுகிலுடன் வெயிலுடனும் இடைக்கிட மந்தமும் மந்த வெய்யிலும் இருக்கும் பிற்பகலின் பின்னர் கரும்படைமுகிலுடனும் கரும்மேகக்கூட்டங்களுடனும் இருக்கும். இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 45 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில பகுதிகளில் அல்லது பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழை தூறல் மழையைவிட சற்று அதிகமழை அல்லது இடியுடன் கூடிய மிருதுவான மழை யாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. 20.03.2008 அன்று பெய்த மழையை விட சற்று குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

வன்னியிலும்
ஒரு சில பகுதியில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும் வாய்ப்பு உள்ளது..

தமிழீழத்தில்
வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்நிலை சற்று குறைந்த நிலையில் நாளை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் நாட்டில்
இன்று அனேகமான இடங்களில் அல்லது பரவலாக மழை பெய்யும் இன் நிலை நாளையும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது கனமழை யாகவும் அனேக இடத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

20.03.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
43 கி.மீ காற்றும்.
97 வீதம் ஈரப்பதனனும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.48 இஞ்செஸ் அமுக்கமும்.
23 பாகை செல்சியஸ் வெப்பமும்.
60 வீதம் ஈரப்பதனும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

18.24 மி.மீ மழை பாரதிபுரத்திலும்.
பாரதிபுரத்தில் மழை பெய்யும் பொழுது பதிவான மழையின் சராசரி 138.24 மி.மீ ஆக உள்ளது.

No comments: