Thursday, March 27, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.


27.03.2008 வியாழக்கிழமை.


இன்று வானம் முற்பகல் கருவெண் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலுமாக இருக்கும். பிற்ககல் கரும் படைமுகிலுடனும் ஒரு சில பகுதிகளில் கரும் முகில் கூட்டத்துடனும் கானப்படும். இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும், காற்று 36 கி.மீ வரைக்குள்ளும், இருப்பதறக்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முற்பகலின் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. இம் மழையானது இடியுடன் பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன். இன்று பரவலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் அல்லது இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் வாய்ப்புக்கள் உள்ளது. பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் அல்லது ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்றும் நாளையும் பரவலாக பெரும் மழை பெய்வற்கான வாய்ப்புகள் இல்லை.

26.03.2008 அன்று பதிவாகாகியுள்ளது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.62 இஞ்செஸ் அமுக்கம் முற்பலும்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
60 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியது.

7.2 மி.மீ மழை பாரதிபுரத்திலும்.
பாரதி புரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி 11.04 மி.மீ ஆகா உள்ளது.


குறிப்பு!
26.03.2008 அன்று கணிப்பிட்ட வானிலை அறிக்கை தவறுதலாக கணிக்கப்பட்டு விட்டது என்பதனை தெரிவித்து கொள்வதுடன் இவ்வாற தவறுகள் வரும் நாட்களில் தவிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

No comments: