Thursday, March 20, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

20.03.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் முற்பகல் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலும் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்கும். பிற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் ஒரு சில இடததிலும் கரும் முகில் கூட்டம் ஒரு சில இடத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது இன்று ஒரு சில பகுதி அல்லது இடத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது பிற்பகலின் பின்னர் இருக்கும். தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யலாம் அல்லது இடியுடன் கூடிய மிருதுவான மழையாக இருக்கலாம். இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்வதற்கான வாய்ப்புகளும் அனேகமாக இல்லை. இன்று பெய்யக்கூடிய மழை தெற்று அல்லது தென் மேற்கு அல்லது தென் கிழக்கு பக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 19.03.2008 பெய்த மழையை விட சற்று குறைவாக இருக்கும்.

வன்னியில்.
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்

மன்னார் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை அல்லது கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது ஏனைய இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை இருக்காலக்கூடும் இவ் மழையானது 19.03.2008 அன்று பெய்த மழையை விட சற்று குறைவாக இருக்கும் வவுனியா அம்பாறை மாவட்டங்களில். ஓர் இரு இடங்களில் இடியுடன் கூடீய மிருதுவான மழை அல்லது அதைவிட குறைவான மழை பெய்யக்குடிய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட கால நிலை தொடரும் வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. இன்நிலை நாளை சற்று குறைந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது.

19.03.2008 அன்று பதிவாகியது.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் பெவ்வமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.48 இஞ்செஸ் அமுக்கமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
83 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியதுடன்

17.52 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி 185.4 மி.மீ ஆகவும் பதிவாகியுள்ளது.

No comments: