Sunday, January 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

13.01.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று முற்பகல் கரும் மேகக்கூட்டம் நகர்ந்தபடி இருப்பதுடன். இடைக்கிட மப்புடனும் மந்தமுடனும் இருக்கும். பிற்பகலின் பின்னர் கரும் முகில் கூட்டங்கள் அதிகமாக இருப்பதுடன் ஏதாவது ஒரு குளிர்ச்சியான பகுதியில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு அதிமாக உள்ளது. இன்று காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை மாவட்டத்தில் தூறல் மழையை விட சற்று அதிமழை அல்லது மிருதுவான மழை பெய்யும் ஒரு சில இடங்களில். மட்டக்கழப்பு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யும் யாழப்பாணத்தில் மழை பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. ஏனைய மாவட்டங்களில் முல்லைத்தீவு வவுனியா திருமலை மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

12.01.2008 அன்று பதிவாகியது
34 கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்
29.79 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

22 பாகை செல்சியஸ் வெப்பமும்
63 வீதம் ஈரப்பதமும்
29.67 இஞ்செஸ் அமுக்கமும் கூறைவாக பதிவாகியுள்ளது.

No comments: