Tuesday, January 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

08.01.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் கரும் வெண் மேகக்கூட்டங்களுடன் காணப்படுவதோடு மந்தமுடனும் மந்த வெயிலும் இடைக்கிட சின்ன மப்புமாக இருக்கும் இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று பரவலாகவோ அல்லது ஆனேக இடத்திலோ மிருதுவான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை. இன்று ஏதவது ஒரு பகுதியில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழை சற்று குறைந்து காணப்படும் மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் இடைக்கிட தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

No comments: