Saturday, January 12, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

12.01.2008 சனிக்கிழமை
இன்று வானம் முற்பகல் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படும். பிற்பகல் அதிக கரும் படைமுகில்டன் இருப்பததுடன் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். பிற்பகலின் பின்னர் ஏதாவது ஒரு இடத்தில் அல்லது ஒரு பகுதியில் தூறல் மழை பெய்துவிட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. இன்று மிருதுவான மழையோ அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில் அம்பாறறை மவட்டத்தில் மிருவான மழை அல்லது அதைவிட சற்று அதிமழை பெய்யும். மட்டக்கழப்பு மவாட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்யும். திருமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிகமழை அல்லது தூறல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

11.01.2008 வெள்ளிக்கிழமை பதிவாகியது
31 கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பமும்.
64 வீதம் ஈரப்பதமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: