Thursday, December 20, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

20.12.2007 வியாழக்கிழமை

இன்று முற்பகல் இருள் சூழ்ந்த மப்புடன் காணப்படும்.இதே நேரம் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்வதுடன் இன்று காற்று 38 கி.மீ வரைக்குள் இருக்கலாம்.வெப்பம்27 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.பிற்பகல் மழை குறைந்து காணப்படும் சில நேரம் மந்தமுடனும் மந்த வெயிலுடனனும் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்று தமிழீழத்தில் பரவலாக முற்பகல் மழை பெய்யும். இன்னும் இரு தினங்கள் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது தாளமுக்கம் சற்று குறைந்து உள்ளதன் காரணத்தால். மழை சற்று குறைந்து காணப்படும். தொடர் மழையாக பெய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

19.12.2007 அன்று பதிவாகியது
35 கி.மீ காற்றும்.
26 பாகை செல்சியஸ் வெப்பமும்.
99 வீதம் ஈரப்பதமும்.
31.38 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளது.

குறிப்பு:.தமிழீழ கால நிலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று மார்கழி மாதத்தினை கடக்க இருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திதில் 19.12.2007 அன்றே மிக கூடுதலான அமுக்கம் பதிவாகியுள்ளது.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்
84 வீதம் ஈரப்பதமும்
30.51 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியதுடன்
பாரதிபுரத்தில் 18 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: