Wednesday, December 19, 2007

இன்றைய தழிழீழ காநிலை

19.12.2007 புதன்கழமை.
இன்று முற்பகல் இருள் சூழ்ந்த மப்புடனும் தூறல் மழை சில இடங்களிலும். மிருதுவான அல்லது மிதமான மழை சில இடங்களிலுமாக கிளிநொச்சியில் காணப்படும்.காலை 11 மணி தொடர்க்கம் பிற்பகல் 5 மணி வரைற்குள் அனேக இடங்களில் மழை குறைந்து சில இடங்களில் தூறியபடியும் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு சற்று அதிக மழை பெய்து விட்டு போகும் நிலையும் கானப்படும். பின்னர் பரவலாக மிதமான மழை அல்லது கனமழை பெய்யும். சில நேரங்களில் காற்றுடனும் இடியுடனும் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று தமிழீழத்தின் மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும். முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழையும் இடைக்கிட காற்றுடன் கூடிய கனமழையும் பரவலாக பெய்யும். வவுனியா மன்னார் அம்பாறை மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும்.
இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளடங்கலாக ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் பரவலாக மழை பெய்யும்.
தாழமுக்கம் காரணமாக தமிழீழத்தின் அனைத்து இடங்களிலும் மூன்று தினங்களுக்கு மேல் மழை நீடிக்கும்.

18.12.2007 அன்று பதிவாகியது.
40 கி.மீ காற்றும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
97 வீதம் ஈரப்பதமும்
30.88 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்
78 வீதம் ஈரப்பதமும்
29.88 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது
29.52 மி.மீ மழையும் கிளிநொச்சி பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.

No comments: