Monday, December 10, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

10.12.2007 திங்கட்கிழமை.

இன்று வானம் 3 மணிவரைக்குள் கரும் வெண்படை முகில் நகர்ந்தபடி இருப்பதுடன் வெயிலுமாக இருக்கும்.இன்று இடைக்கிட சின்ன மந்தத்தன்மையுடன் இருக்கும். இன்று காற்று 36 கி.மீ வரைக்குள் இருக்கும்.வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் இன்று ஓரு சில இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை.இதேநேரம் வன்னியில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. இன்று அல்லது நாளை தமிழீழத்தில் அம்பாறையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.மட்டக்களப்பின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. திருமலையின் ஓர் இரு பகுதிகளில். தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


09.12.2007 அன்று பதிவாகியது

37 கி.மீ காற்றும்.
29 பாகை செய்சியஸ் வெப்பமும்.
91 வீதம் ஈரப்பதமும்
29.74 இஞ்செயஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செய்சியஸ் வெப்பமும்.
69 வீதம் ஈரப்பதமும்.
29.62 இஞ்செயஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளதுடன்

பாரதி புரத்தில் தூறிவிட்டு போன மழையின் அளவு
5 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

No comments: