Friday, May 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

23.05.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் கருவெண் படைமுகில் நகர்ந்த படி முற்பகல் கானப்படும் பிற்பகல் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசையில் கரும் இருள்கள் கானப்படவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன் மேற்குறிப்பிட்ட திசைகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ் மழை மிருது வான மழைக்கு உட்பட்டு அல்லது தூறல்மழையை விட சற்று அதிக மழையாக இருக்கலாம்.இது அனேகமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா எல்லையோரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

சந்திரன் 18ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்

மன்னார், வுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

22.05.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.60 இஞ்செஸ் அமுக்கம்
91 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
40 கி.மீ காற்று தெற்கில் இருந்து கிழக்கு நோக்கி
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.50 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
47 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: