Friday, February 29, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

29.02.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் மப்பும் மந்தமுடனும் இருக்கும் இன்று வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 42 கி.மீ வரைக்குள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் ஒரு சில பகுதியில் கனமழையும். ஏனைய இடங்களில் மிதமான மற்றும் மிருதுவான மழையும் பெய்யும்.

தமிழீழத்தில்.
அம்பாறை,மட்டக்களப்பு,திருமலை,மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பரவலாக பெய்யும் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் மிதமான மிருதுவான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும்.ஏனைய மாவட்டங்களில் மிருதுவான மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்நிலை நாளை சற்று குறைந்த நிலையில் இருப்பதுடன் வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களில் மிருதுவான மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

28.02.2008 அன்று பதிவாகியது

29.79 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
36 கி.மீ காற்றும்
95 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியதுடன்
29.02.2008 அதிகாலை தொடற்கம் முற்பகல் 9.45 வரை பெய்த மழை
பாரதிபரதத்தில் 22.32 மி.மீ மழையும்
வன்னியில் பெய்த சராசரி மழை 138.24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: