28.02.2008 வியாழக்கிழமை
இன்று முற்பகல் வானம் கரும் படைமுகில் சில இடங்களிலும் கரு வெண் கருமுகில் ஏனைய இடங்கிளிலும் கானப்படும். இதேநேரம் வெயிலும் இருக்கும் பிற்பகலின் பின்னர் கரும் முகில் அதிகமாக கானப்படும். இன்று காற்று 40 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில பகுதியில் தூறல் மழையும் ஒரு சில தாழ்வான இடங்களில் தூறல் மழையை விட சற்று அதி மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளது. மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.
27.02.2008 அன்று பதிவாகியது.
29.78 இஞ்செஸ் அமுக்கம்
95 வீதம் ஈரப்பதம்
28 பாகை செல்சியஸ் வெப்பம்
43 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.65 இஞ்செஸ் அமுக்கமும்
77 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
40.32 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
108 மி.மீ மழை சராசரியாக வன்னியில் பதிவாகியுள்ளது..
குறிப்பு!
27.02.2008 அன்று குறிப்பிட்ட வானிலை அறிக்கையில் சில கணிப்புகள் தவறாக கணிக்கப்பட்டு விட்டது .
பரவலாக மழை பெய்யாது என்று குறிப்பிட்டது தவறு பரவலாக மழை பெய்தது
30 கி.மீ காற்று வீசும் என்றதும் தவறாக இருந்தது 43 கி.மீ காற்று வீசியது.
தூறல் மழையை விட சற்று அதிகமழை என்றதும் தவறு. சில இடங்களில் கனமழையும்
ஏனைய இடங்களில் மிருதுவான மற்றும் மிதமான மழையும் பெய்தது என்பதனை வேதனையுடன்
குறிப்பிடுகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment