Wednesday, December 17, 2008

இன்றைய முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட காலநிலை


17.12.2008 புதன்கிழமை.


இன்று வானம் மேகமூட்டத்துடன் இடையிடையே வெளிப்பாகவும் கானப்படும். இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அனேகமான இடங்களில் மிருதுவான மழை விட்டு விட்டு பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் அல்லது அனேகமான இடங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. வெப்பம் 28 தொடற்கம் 29பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 35 தொடற்கம் 40கி.மீ வரைக்குள் இருக்கக்கூடி வாய்ப்புகளும் உள்ளது.

முன்கூட்டிய வானிலை முன்னறிவிற்பு
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் இன்றைய காலநிலை சற்று குறைந்த நிலையில் நளையும் கானப்படும்.19.12.2008 முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிருதுவான மழைக்குட்பட்டு பெய்யும் . 20.12.2008 வரைக்குள் பெரும் தொடர் மழையோ அல்லது கணமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை.

16.12.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.81 இஞ்செஸ் அமுக்கம்
%96 ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
27 கி.மீ காற்று கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.68 இஞ்செஸ் அமுக்கம்
%85 ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

16.12.2008 அன்று 24மணி நேரத்தில் வீசுவமடு பகுதியில் பதிவாகிய மழை வீழ்ச்சி 87.5 மி.மீ ஆக உள்ளது.

Tuesday, December 16, 2008

இன்றைய கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட காலநிலை.

16.12.2008 செவ்வாய்க்கிழமை

இன்று வானம் மேகமூட்டத்துடன் மப்பாக கானப்படும் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 30தொடற்கம் 40கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பரவலாக அல்லது அனேகமான இடங்களில் மிதமான மழைக்கு உட்பட்ட மழை தொடரும்.

முன்கூட்டடிய காலநிலை மாற்றம்
18.12.2008ம் திகதி வரை மழை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விட்டு விட்டு அல்லது தொடர்ந்து பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

15.12.2008 அன்று பதிவாகியது.
29.81 இஞ்செஸ் அமுக்கம்
%98 ஈரப்பதன்
29 பாகை செல்சியஸ் வெப்பம்.
37 கி.மீ காற்று கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.68 இஞ்செஸ் அமுக்கம்
%88 ஈரப்பதன்
23 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

15.12.2008 பதிவாகிய மழைவீழ்ச்சி 187.5 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.